பாடல் #1137
இயேசுவின் நாமத்தில் நாம் கூடிடும்
🎙 கிறிஸ்தவ பாடல்
இயேசுவின் நாமத்தில் நாம் கூடிடும் சமயங்களில் பேசுவார் தியானத்திலே அவர் தம் கிருபைகள் அளிக்க மலைகள் விலகினாலும் மாபர்வதம் நிலை பெயர்ந்தும் என்றும் மாறாத அவர் கிருபைகள் தம் மக்களுக்காருதலே கஷ்டங்கள் கவலைகளில் அன்பு கரம் தம்மை தாங்கிடுமே நஷ்டங்கள் மாறிடுமே நாதன் இயேசுவின் நாமத்தினால் சீயோனில் அவர் நம்மையே சிறு மந்தையாய் சேர்ந்திடுவார் நித்ய ராஜ்யத்தை தந்திடுவார் சத்ய பாதையில் நடந்ததினால்