பாடல் #11245
அப்பா மடியில்
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
அப்பா மடியில் சாய்ந்து உறங்குவேன் என் பாரங்களை எல்லாமே தோளில் சுமத்துவேன் -உங்க (2) ஆராதனை ......ஆராதனை . .....ஆராதனை 1.இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடந்தாலும் நீர் என்னை ஒரு போதும் மறப்பதில்லை காரிருள்கள் என்னை சூழ்ந்து கொண்டாலும் -என் கால்களுக்கு தீபமாக நீர் வருவீர் 2.இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசம்பண்ணும் உயர்ந்தவரும் சிறந்தவருமானவரே சீயோனில் வாசம்பண்ணும் நாயகனே -உம் சிறகினிலே என்னை கொஞ்சம் மூடிக்கொள்ளும் 3. அநித்தியமான இந்த உலகம் அழிந்து போகும் நித்தியமான பரலோகம் நிலைத்து நிற்கும் எப்போது நீர் இறங்கி வருவீரோ -உம் வருகைக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்