பாடல் #1124
உன்னதப் பரமண்டலங்களில்
🔤 Unnathap Paramandalanggalil
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதப் பரமண் டலங்களில் வசிக்கும் ஒளிர்பிதாவே உனின் நாமம் உயர் பரி சுத்த மாய்த்தொழப் படுக; உனது ராச்சிய முறை வருக; முன்னிய உனது சித்தமே பரத்தில் முடியுமாப் போல, இப்புவியில் முடிவுறச் செய்யப் படுவது மாக; முழுதும் நின் கரத்தையே நோக்கும் நின் அடியார்க்கன் றாடக உணவு நிரம்பவே அருள்; பிறர் இயற்றும் நீதிக்கே டினை யாம் பொறுப்பது போல,நிமலனே, எம்பவம் மனியாய்; இன்னமும் எமைச்சோ தனைக்குட் படாமல் இடர் தவிர்த் திரக்கமாய்க் காவாய்; இராச்சியம் வல்லமை மகிமைமற் றெவையும் என்றும் உன் உடைமையே; ஆமென்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnathap Paraman Talanggalil Vasikkum Olirpithaavae Unin Naamam Uyar Pari Suttha Maaytthozhap Patuga; Unathu Raachsiya Murai Varuga; Munniya Unathu Sitthamae Paratthil Mutiyumaap Pola, Ippuviyil Mutivurach Seyyap Patuvathu Maaga; Muzhuthum Nin Karatthaiyae Nokkum Nin Atiyaarkkan Raadaka Unavu Nirambavae Arul; Pirar Iyarrum Neethikkae Tinai Yaam Poruppathu Pola,nimalanae, Embavam Maniyaay; Innamum Emaichso Thanaikkut Pataamal Idar Thavirth Thirakkamaayk Kaavaay; Iraachsiyam Vallamai Makimaimar Revaiyum Enrum Un Utaimaiyae; Aamen.