பாடல் #11084
சொந்த இரத்தம் சிந்தி
🎙 கிறிஸ்தவ பாடல்
சொந்த இரத்தம் சிந்தி என்னை சொந்தமாக்கிக் கொண்டீரே நீர் நன்றி நன்றி நன்றி ஐயா நன்றி நன்றி என் இயேசையா மண்ணான மனிதன் எனக்காக மரத்திலே தூக்கப்பட்டு சாபமானீரே நியாயப்பிரமாண சாபத்திற்கென்னை நீங்கலாக்கி மீட்டுக் கொண்டீரே பாவ மனிதன் எனக்காக பாடுகள் எல்லாம் ஏற்றுக் கொண்டீரே இரத்தத்தினாலே பிதாவை சேரும் சிலாக்கியம் எனக்கு பெற்றுத் தந்தீரே என்மீது கொண்ட அன்பினாலே அவமானம் எல்லாம் ஏற்றுக்கொண்டீரே விலையேறப்பெற்ற கிருபையாம் இரட்சிப்பை இலவசமாக பெற்றுத் தந்தீரே