பாடல் #11044
சியோனின் பாதையில் சேர்ந்திடும்
🔤 Siyonin Paathaiyil Saernthitum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சியோனின் பாதையில் சேர்ந்திடும் வீரரே செல்லுவீரே அதிவேகமாய் காரிருள் பூமியை மூடிடுதே கர்த்தரின் வருகை சமீபமாகுதே காத்து நிற்கும் தேவசேயராம் உம்மிலே கர்த்தரே தன் ஒளி வீசுவார் கொந்தளித்தே ஜனம் மாறிடுதே சந்ததமாய் நிந்தைகள் ஏறிடுதே சொந்தமாய் மீட்பவர் அன்பினால் தந்த மா சந்தோஷமாம் நதி மூழ்கியே காசினியில் உன்னை தாய் மறப்பாளோ ஆயினும் எந்நாளும் நான் மறந்திடேன் கைத்தலம் தன்னிலும் கண்மணி போலுமே காத்திடுவேன் என்றார் வாக்கதே ஜோதியாய் உன் நீதி சூரியன் போலும் ஜொலிக்குமே உன் இரட்சிப்பு தீவட்டி போலும் கீதமும் நாதமும் கேட்டிட உன்னிலே ஆதிபரன் இயேசு ஆக்குவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siyonin Paathaiyil Saernthitum Veerarae Selluveerae Athivaegamaay Kaarirul Poomiyai Mootituthae Karttharin Varukai Sameebamaakuthae Kaatthu Nirkum Thaevasaeyaraam Ummilae Karttharae Than Oli Veesuvaar Kondhalitthae Janam Maarituthae Sandhathamaay Ninthaigal Aerituthae Sondhamaay Meetpavar Anpinaal Thandha Maa Santhoshamaam Nathi Moozhkiyae Kaasiniyil Unnai Thaay Marappaalo Aayinum Ennaalum Naan Maranthitaen Kaitthalam Thannilum Kanmani Polumae Kaatthituvaen Enraar Vaakkathae Jothiyaay Un Neethi Sooriyan Polum Jolikkumae Un Iratsippu Theevatti Polum Keedhamum Naadhamum Kaettida Unnilae Aathibaran Yesu Aakkuvaar