பாடல் #11031
வானமதில் ஏறிப்போன இயேசுவானவர்
🔤 Vaanamathil Aerippona Yesuvaanavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானமதில் ஏறிப்போன இயேசுவானவர் வருகை நாளில் திரும்பி வருவார் தூதர்களுடன் ஆர்ப்பரிப்பின் சத்தம் எங்கும் கேட்குமே ஆரவார எக்காளம் வானில் முழங்குமே அல்லேலூயா அல்லேலூயா பரிசுத்தத்தைக் காத்துக் கொண்ட பக்தர் யாவரும் பறந்து செல்லும் பரவச நாள் நெருங்கி வருகுதே பாடு கஷ்டங்கள் சகித்து வாழ்ந்தோர்கள் பரமன் பாதம் பாடல் பாடி என்றும் மகிழ்வார்கள் மாம்சம் இரத்தம் உலக ஆசை அழிந்து போகுமே பாவ சாபம் ரோகம் யாவும் மறைந்து போகுமே இமை பொழுதிலே மறுரூபம் பெறுவோமே மன்னன் இயேசு அழைத்துச் செல்வார் மா சந்தோஷமே இராஜ்ஜியத்தின் சுவிசேஷம் எங்கும் தொனிக்குதே சாட்சி கூறி செய்தி சொல்ல தருணம் தந்தாரே ஆத்துமாக்களை சேகரிப்போமே ஆண்டவரின் வருகை நாளில் ஆனந்திப்போமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanamathil Aerippona Yesuvaanavar Varukai Naalil Thirumpi Varuvaar Thoodharkaludan Aarpparippin Sattham Engkum Kaetkumae Aaravaara Ekkaalam Vaanil Muzhangkumae Allaelooyaa Allaelooyaa Parisutthatthaik Kaatthuk Konda Pakthar Yaavarum Paranthu Sellum Paravasa Naal Nerungki Varukuthae Paatu Kashtanggal Sakitthu Vaazhnthorkal Paraman Paadham Paadal Paati Enrum Makizhvaarkal Maamsam Rattham Ulaka Aasai Azhinthu Pokumae Paava Saabam Rogam Yaavum Marainthu Pokumae Imai Pozhuthilae Maruroobam Peruvomae Mannan Yesu Azhaitthuch Selvaar Maa Santhoshamae Iraajjiyatthin Suvisaesham Engkum Thonikkuthae Saatsi Koori Seythi Solla Tharunam Thanthaarae Aatthumaakkalai Saegarippomae Aandavarin Varukai Naalil Aananthippomae