பாடல் #11027
புதுமை தேவகுமாரன்
🔤 Puthumai Thaevakumaaran
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புதுமை தேவகுமாரன் பிறந்தார் பெத்லகேம் பாலன் புல்லணைமீதே தவழ்ந்தாரே தூதர் நற்செய்தி சாற்றிடவே தேடிச் சென்றனரே ஓர் கூட்டம் காத்திருந்த நல் மேய்ப்பர் அன்றே கண்ட காட்சியிதே ஆயர்குடியில் அன்புருவம் ஆண்டவர் பிறந்தார் மாவிந்தை வான சாஸ்திரிகளும் பணிந்தே வணங்கும் தாழ்மையிதே மாந்தர்கள் அன்று காரிருளில் மாபெரும் வெளிச்சம் கண்டார்கள் மங்கிடாமனஜோதி இயேசு மகிமை சாட்சியிதே பண்புமிகும் இப்பாலகனே பள்ளத்தாக்கின்மலர் லீலிப்பூ தம்மைப் பின்பற்றியே நடப்போர் துதிக்கும் கானமிதே தேவ பிதாவைச் சேர்வதற்கே ஜீவமார்க்கம் இவர் கிறிஸ்து முன்னணை முதல் கொல்கொதாவறை துன்பப் பாதையிதே விண்விடிவெள்ளி பாலகனே மண்ணுலகில் உதித்தார் மீண்டும் மின்னலைப்போல் வருவார் மன்னன் வாக்க்குமிதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthumai Thaevakumaaran Piranthaar Pethlakaem Paalan Pullanaimeethae Thavazhnthaarae Thoodhar Narseythi Saarridavae Thaetich Sendranarae Or Koottam Kaatthirundha Nal Maeyppar Anrae Kanda Kaatsiyithae Aayarkutiyil Anpuruvam Aandavar Piranthaar Maavinthai Vaana Saasthirigalum Paninthae Vanangkum Thaazhmaiyithae Maandharkal Anru Kaarirulil Maaperum Veliccham Kantaarkal Mangkitaamanajothi Yesu Makimai Saatsiyithae Panpumikum Ippaalakanae Pallatthaakkinmalar Leelippoo Thammaip Pinbarriyae Natappor Thuthikkum Kaanamithae Thaeva Pithaavaich Saervatharkae Jeevamaarkkam Ivar Kiristhu Munnanai Mudhal Kolkothaavarai Thunbap Paathaiyithae Vinvitivelli Paalakanae Mannulakil Uthitthaar Meentum Minnalaippol Varuvaar Mannan Vaakkkumithae