பாடல் #11020
காரிருள் சூழ்ந்த வானிலே
🎙 கிறிஸ்தவ பாடல்
காரிருள் சூழ்ந்த வானிலே மின்னும் விண்மீன்கள்நடுவிலே தவழுகின்ற நிலவைப் போலவே இந்நிலத்தில் இருளகற்ற இயேசு பிறந்தார் கண்களில் கருணை ஒளியோடு தோன்றினார் தேவமைந்தன் பார்த்ததும் வானதூதர் அன்று பாடினார் அல்லேலூயா கானம் கேட்டதும் ஏன் அழுகிறாய் நாளைய இன்னல் எண்ணியா குளிரிலே கந்தை துணியினால் போர்த்திய தேவ குழந்தையை - கண்டதும் கைகள் இரண்டில் அள்ளியே கொஞ்சிடதோன்றிடும் குழந்தை இயேசுவை தாலாட்டவே உள்ளம் துடிக்குதே