பாடல் #1102
உனக்கெது வேணும்? இன்னும் எது வேணும்
🎙 கிறிஸ்தவ பாடல்
உனக்கெது வேணும்? இன்னும் எது வேணும் பின்னும் எது வேணும்? சொல் பாவியே உடல் அழிந்து போகும் முன்னமே. 1. பாவத்தோடெதிர்த்துப் பக்தியாய்ச் சேவித்துப் பாடித் துதிக்க வேணுமா? வேணுமா? அல்லால் பராபரனோ டெதிர்த்து மாயவலை யடுத்து மாண்டு மடிய வேண்டுமா? 2. கர்த்தன் அருள் பெற்று கவலை எல்லாம் நீங்கிக் களித்துச் சுகிக்க வேணுமா? வேணுமா? அல்லால் கண்ட இடத்தினின்று கடவுளைத் தூஷித்துக் கசடனாக வேணுமா? 3. பாவத்தை விட்டு நீ பக்தனாய் ஜீவித்துப் பதவி பெற்றிட வேணுமா? வேணுமா? அல்லால் பாச வலைக்குள் சிக்கி மோசம் செய்கின்ற பேயைப் பற்றித் தொடர வேணுமா? 4. என் ஆத்துமத்தைச் சுத்தம் செய்து காக்கின்ற அப்பனார் அருள் வேணுமா? வேணுமா? பெருந் தண்டனைக் குட்பட்டுத் தட்டுக் கெட்டலையும் சாத்தான் உறவு வேணுமா? 5. மனம் மாறிப் பிறந்த நீ மாசற்று ஜீவிக்க மகத்வன் கிருபை வேணுமா? வேணுமா? மிக பாச வலையை வீசி நேசத்தைக் காட்டி பின் மோசம் செய் மதம் வேணுமா?