பாடல் #11018
தேவாதி தேவன் ராஜாதி
🔤 Thaevaathi Devan Raajaathi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவாதி தேவன் ராஜாதி ராஜன் பாவ உலகினில் வந்துதித்தார் ஏரோது மாளிகை தேடாத மா ராஜன் ஏழை தொழுவத்தில் ஜெனித்தவர் வானத்தில் தோன்றும் ஓர் நட்சத்திரம் வான சாஸ்திரிகள் முன் சென்றாலும் பாதை தவறியே சோகமடைந்த பின் பாலகன் இயேசுவைக் கண்டடைவோம் அன்னை மரியாள் அளவில்லாத ஆசீர்வாதங்கள் மிக அடைந்தாள் அந்த கிருபைகள் சொந்தமுடன் பெற ஆண்டவர் இயேசுவைக் கண்டடைவோம் சத்திரத்திலேஸ்தலமில்லையே சத்திய தேவன் தலை சாய்க்கவே தாழ்மை சொரூபியே தாழ இறங்கியே தங்கும் இடத்தை கண்டடைவோம் ஆண்டவர் பிறந்த பெத்லகேம் ஆயிரங்களில் சிறியஸ்கனும் இஸ்ரவேல் ராஜனை இம்மானுவேலனை இன்பமுடன் தேடி கண்டடைவோம் கண்ணார கண்டேன் உம் இரட்சண்யத்தை காலா காலமாகக் காத்திருந்தேன் என்று சிமியோன் தன் கையில் எடுத்து நம் இயேசுவைவாழ்த்தியே கண்டடைந்தான் தள்ளின கல்லே தலைக்கல்லாக தாமதமின்றி வருகின்றவர் ஆயர் குடிலிடை பாலகனாய் தோன்றும் தூய பிதாமுகம் கண்டடைவோம
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaathi Devan Raajaathi Raajan Paava Ulakinil Vanthuthitthaar Aerothu Maalikai Thaetaadha Maa Raajan Aezhai Thozhuvatthil Jenitthavar Vaanatthil Thonrum Or Natsatthiram Vaana Saasthirigal Mun Senraalum Paathai Thavariyae Sogamataindha Pin Paalakan Yesuvaik Kandataivom Annai Mariyaal Alavillaadha Aaseervaadhanggal Miga Atainthaal Andha Kirupaigal Sondhamudan Pera Aandavar Yesuvaik Kandataivom Satthiratthilaesthalamillaiyae Satthiya Devan Thalai Saaykkavae Thaazhmai Soroopiyae Thaazha Irangkiyae Thangkum Idatthai Kandataivom Aandavar Pirandha Pethlakaem Aayiranggalil Siriyaskanum Isravael Raajanai Immaanuvaelanai Inbamudan Thaeti Kandataivom Kannaara Kantaen Um Iratsanyatthai Kaalaa Kaalamaagak Kaatthirunthaen Enru Simiyon Than Kaiyil Etutthu Nam Yesuvaivaazhtthiyae Kandatainthaan Thallina Kallae Thalaikkallaaga Thaamathaminri Varukindravar Aayar Kutilitai Paalakanaay Thonrum Thooya Pithaamugam Kandataivoma