பாடல் #11008
ஜெனித்தார் ஜெனித்தார்
🔤 Jenitthaar Jenitthaar
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெனித்தார் ஜெனித்தார் எங்கள் ஜெகதல இரட்சகனே உதித்தார் உதித்தரர் எங்கள் உயர் மனுவேலனே 1. கந்தைகளணிந்தவரே - பாவ கந்தைகளகற்றிடவே சொந்த குமாரனாக சொந்தம் பாராட்டியே விந்தையாக ஜெனித்தார் - ஜெனி 2. உன்னதம் துறந்தவர் - எமை உன்னதராக்கிடவே கண்மணி பாலனாய் கனி வினையகற்ற கன்னியின் மடியில் உதித்தார் - ஜெனி 3. வானம் திறந்திடவே - வான சேனைகள் தித்திடவே ஞானியர் தேடிட இடையர் வாழ்த்திட இனிய தேவன் பிறந்தார் 4. தலைமுறை தலைமுறையாய் - அவர் இரக்கங்கள் முடிவதில்லை இரட்சணிய வார்த்தையே இரட்சகர் இயேசுவே இரக்கத்தின் மீது ஜெனித்தார் - ஜெனி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jenitthaar Jenitthaar Enggal Jegathala Iratsakanae Uthitthaar Uthittharar Enggal Uyar Manuvaelanae 1. Kanthaigalanindhavarae - Paava Kanthaigalakarridavae Sondha Kumaaranaaga Sondham Paaraattiyae Vinthaiyaaga Jenitthaar - Jeni 2. Unnatham Thurandhavar - Emai Unnatharaakkidavae Kanmani Paalanaay Kani Vinaiyakartra Kanniyin Matiyil Uthitthaar - Jeni 3. Vaanam Thiranthidavae - Vaana Saenaigal Thitthidavae Njaaniyar Thaetida Itaiyar Vaazhtthida Iniya Devan Piranthaar 4. Thalaimurai Thalaimuraiyaay - Avar Irakkanggal Mutivathillai Iratsaniya Vaartthaiyae Iratsakar Yesuvae Irakkatthin Meethu Jenitthaar - Jeni