பாடல் #1099
உனக்குள்ளே இருக்கின்ற
🔤 Unakkullae Irukkindra
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உனக்குள்ளே இருக்கின்ற உன் இயேசு என்றும் பெரியவரே நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்கள் செய்திடுவார் 1. நம்பிக்கை இல்லா நிலையானதோ விசுவாசம் உன்னில் குறைவானதோ - 2 அற்புதர் உனக்குள் இருக்கின்றார் அதிசயம் செய்வார் நீ கலங்காதே - 2 2. சூழ்நிலை எல்லாம் எதிரானதோ சுற்றத்தார் உன்னில் பகையானாரோ - 2 வல்லவர் உனக்குள்ளே இருக்கின்றார் வலக்கரம் தாங்குவார் கலங்காதே - 2 3. மதுரமான வாழ்வு கசப்பானதோ ஒளிவரும் நேரம் இருளானதோ - 2 ஜீவனுள்ள தேவன் இருக்கின்றார் யாவையும் செய்வார் கலங்காதே - 2 4. இல்லை என்ற நிலை வந்தாலும் இருப்பதை போல் அழைக்கும் - 2 பெரியவர் உனக்குள்ளே இருக்கின்றார் எல்லாம் பார்த்துக்கொள்வார் நீ கலங்காதே - 2 5. பெருவெள்ளம் மோதி அடிக்கின்றதோ பெருங்காற்றில் படகு தவிக்கின்றதோ - 2 பெரியவர் உனக்குள்ளே இருக்கின்றார் பார்த்துக்கொள்வார் நீ கலங்காதே. - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unakkullae Irukkindra Un Yesu Enrum Periyavarae Nee Ariyaadhathum Unakku Ettaadhathumaana Periya Kaariyanggal Seythituvaar 1. Nampikkai Illaa Nilaiyaanatho Visuvaasam Unnil Kuraivaanatho - 2 Arpudhar Unakkul Irukkinraar Athisayam Seyvaar Nee Kalangkaathae - 2 2. Soozhnilai Ellaam Ethiraanatho Surtratthaar Unnil Pakaiyaanaaro - 2 Vallavar Unakkullae Irukkinraar Valakkaram Thaangkuvaar Kalangkaathae - 2 3. Mathuramaana Vaazhvu Kasappaanatho Olivarum Naeram Irulaanatho - 2 Jeevanulla Devan Irukkinraar Yaavaiyum Seyvaar Kalangkaathae - 2 4. Illai Endra Nilai Vanthaalum Iruppathai Pol Azhaikkum - 2 Periyavar Unakkullae Irukkinraar Ellaam Paartthukkolvaar Nee Kalangkaathae - 2 5. Peruvellam Mothi Atikkindratho Perungkaarril Pataku Thavikkindratho - 2 Periyavar Unakkullae Irukkinraar Paartthukkolvaar Nee Kalangkaathae. - 2