பாடல் #1098
உனக்கும் எனக்கும்
🔤 Unakkum Enakkum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உனக்கும் எனக்கும் தேவன் தந்த காலம் அல்லவா .. இதை உணராமல் ஜீவிப்பது பாவம் அல்லவா! பிறருக்காக வாழும் வாழ்க்கை உன்னதம் அல்லவா .. இதை அறிந்து உணர்ந்து வாழும்போது இலாபம் அல்லவா! வந்துபோன மனிதர் எல்லாம் உலகம் நினைப்பதில்லை மரித்தும் பேசும் மனிதர் உண்டு என்றும் அவர்கள் கொஞ்சமே தியாகத்தோடு தீபமாக வாழ்ந்த தேவ மனிதரை இதிகாசம் மறந்ததாக சேதி ஒன்றும் இல்லையே! அருவி போன்ற ஆசீர்வாதம் பெற்று மகிழ வாருங்கள் ஆவியாலே உள்ளம் பொங்கி துள்ளி சேவை செய்யுங்கள் பிறருக்காக சேவை செய்து மகிழ்ச்சி வெள்ளமாகுங்கள் திரள் ஜனத்தை சிலுவை பக்கம் கொண்டு வந்து சேருங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unakkum Enakkum Devan Thandha Kaalam Allavaa .. Ithai Unaraamal Jeevippathu Paavam Allavaa! Pirarukkaaga Vaazhum Vaazhkkai Unnatham Allavaa .. Ithai Arinthu Unarnthu Vaazhumpothu Ilaabam Allavaa! Vanthupona Manidhar Ellaam Ulakam Ninaippathillai Maritthum Paesum Manidhar Untu Enrum Avarkal Konjjamae Thiyaagatthotu Theebamaaga Vaazhndha Thaeva Manidharai Ithikaasam Marandhathaaga Saethi Onrum Illaiyae! Aruvi Pondra Aaseervaadham Perru Makizha Vaarunggal Aaviyaalae Ullam Pongki Thulli Saevai Seyyunggal Pirarukkaaga Saevai Seythu Makizhchsi Vellamaakunggal Thiral Janatthai Siluvai Pakkam Kontu Vanthu Saerunggal