பாடல் #10962
சமுத்திரம் ஜலத்தினால்
🎙 கிறிஸ்தவ பாடல்
சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருப்பது போல இயேசுவும் எனக்குள்ளே நிறைந்திருக்கிறார் நீரின்றி மீன்கள் வாழ்ந்திருக்குமோ நீர் இன்றி நானும் வாழ்ந்திருப்பேனோ கரையின்றி நதி தான் கடல் சேருமோ கரையாகிக் கர்த்தனே கதிசேருமே பூவின்றி நார்தான் மணம் பெறுமோ தேவனில்லா வாழ்வும் வாழ்வாகுமோ செடியின்றிக் கொடியும் நிலை நிற்குமோ செடியோடே கொடியாய் இணைத்திடுமே ஆயிரம் மலர்கள் மலர்ந்தாலும் ஆதவன் மகிழ்வது ஒரு மலரால் ஆயிரம் பேர்கள் வாழ்ந்தாலும் ஆண்டவன் மகிழ்வது ஒரு சிலரால்