பாடல் #1096
உனக்கு நிகரானவர்
🔤 Unakku Nigaraanavar
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உனக்கு நிகரானவர் யார்? - இந்த உலக முழுவதிலுமே. தனக்குத் தானே நிகராம் தாதை திருச் சுதனே மனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த - உனக்கு 1.தாய் மகளுக்காகச் சாவாளோ - கூடப் பிறந்த தமையன் தம்பிக்காய் மாய்வானோ? நேயன் நேயர்க்காய் சாவானோ? தனதுயிரை நேர் விரோதிக்காய் ஈவானோ? நீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்து காயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி - உனக்கு 2.கந்தை உரிந்தெறிந்தனை - நீதியின் ஆடை கனக்க உடுத்துவித்தனை, மந்தையில் சேர்த்து வைத்தனை, கடிம்வினைகள் மாற்றி எந்தனைக் காத்தனை; கந்த மலர்ப் பாதனே, கனக ரத்ன மேருவே, சிந்தை உவந்து வந்த தியாக ராசனே, சுவாமி - உனக்கு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unakku Nigaraanavar Yaar? - Indha Ulaka Muzhuvathilumae. Thanakkuth Thaanae Nigaraam Thaathai Thiruch Sudhanae Manukkulam Thannai Meetka Maanidanaaga Vandha - Unakku 1.thaay Makalukkaagach Saavaalo - Koodap Pirandha Thamaiyan Thampikkaay Maayvaano? Naeyan Naeyarkkaay Saavaano? Thanathuyirai Naer Virothikkaay Eevaano? Nee Im Mannulakil Neesarkatkaaga Vanthu Kaayum Manamatavarkkaaga Maritthaay Suvaami - Unakku 2.kanthai Urintherindhanai - Neethiyin Aatai Kanakka Ututthuvitthanai, Manthaiyil Saertthu Vaitthanai, Katimvinaigal Maarri Endhanaik Kaatthanai; Kandha Malarp Paadhanae, Kanaka Rathna Maeruvae, Sinthai Uvanthu Vandha Thiyaaga Raasanae, Suvaami - Unakku