பாடல் #10941
உங்க வல்லமையாலே என்னை
🎙 கிறிஸ்தவ பாடல்
உங்க வல்லமையாலே என்னை நிரப்புங்க உங்க மகிமையாலே என்னை மூடுங்க மறுரூபமாக்கி என்னை பயன்படுத்துங்க பாவத்திலே வாழ்ந்த என்னை தேடிவந்த தேவன் நீரே பரிசுத்த இரத்தம் சிந்தி மீட்டவரும் நீர்தானே பாவத்தை வெறுத்து தள்ளும் பரிசுத்த தேவன் நீரே பாவியான என்னையும் நேசித்தவர் நீர்தானே ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுங்க அபிஷேக தைலம் ஊற்றி அனலாய் மாற்றிடுங்க ஆவியின் கனிகளினால் என்னையும் நிரப்பிடுங்க அப்பாவே உந்தன் மகிமையால் என்னை மூடிடுங்க