பாடல் #1093
உனக்கொத்தாசை வரும் நல்
🔤 Unakkotthaasai Varum Nal
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உனக் கொத்தாசை வரும் நல் உயர் பருவதம், - இதோ! தினமும் மனது நொந்து சிந்தை கலங்குவோனே - உன 1.வானம் புவி திரையும் வகுத்த நன்மைப் பிதாவின் மாட்சிமையின் கரமே வல்லமையுள்ள தல்லோ? - உன 2.காலைத் தள்ளாடவொட்டார், கரத்ததைத் தளரவொட்டார்; மாலை உறங்கமர்டார், மறதியாய்ப் போகமாட்டார். - உன 3.கர்த்தருனைக் காப்பவராம், கரமதில் சேர்ப்பவராம்; நித்தியம் உன்றனுக்கு நிழலாயிருப்பவராம். - உன 4.பகலில் வெயிலேனிலும், இரவில் நிலவெனிலும், இகல் தருவதுமில்லை, இன்னல் செய்வதுமில்லை. - உன 5.தீங்கு தொடராதுன்னை, தீமை படராதுன்மேல்; தாங்குவார் தூதர் கோடி, தாளிடறாதபடி. - உன 6.போக்கும் ஆசீர்வாதமாம், வரத்தும் ஆசீர்வாதமாம்; காக்கைக் குஞ்சுகள் முதல் கதறி நம்பிவிடுமே. - உன 7.துன்ப துயரத்ததிலும் துக்க சமயத்திலும், இன்பமுறும் பொழுதும் எல்லாம் உனக்கவரே. - உன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unak Kotthaasai Varum Nal Uyar Paruvatham, - Itho! Thinamum Manathu Nonthu Sinthai Kalangkuvonae - Una 1.vaanam Puvi Thiraiyum Vakuttha Nanmaip Pithaavin Maatsimaiyin Karamae Vallamaiyulla Thallo? - Una 2.kaalaith Thallaadavottaar, Karatthathaith Thalaravottaar; Maalai Uranggamartaar, Marathiyaayp Pogamaattaar. - Una 3.karttharunaik Kaappavaraam, Karamathil Saerppavaraam; Nitthiyam Undranukku Nizhalaayiruppavaraam. - Una 4.pakalil Veyilaenilum, Iravil Nilavenilum, Igal Tharuvathumillai, Innal Seyvathumillai. - Una 5.theengku Thodaraathunnai, Theemai Pataraathunmael; Thaangkuvaar Thoodhar Koti, Thaalidaraadhapati. - Una 6.pokkum Aaseervaadhamaam, Varatthum Aaseervaadhamaam; Kaakkaik Kunjsugal Mudhal Kathari Nampivitumae. - Una 7.thunba Thuyaratthathilum Thukka Samayatthilum, Inbamurum Pozhuthum Ellaam Unakkavarae. - Una