பாடல் #1091
உந்தன் பெலத்திலே தேவா எழுந்தருளும்
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
உந்தன் பெலத்திலே தேவா எழுந்தருளும் உந்தன் மகத்துவத்தின் மேன்மையுடன் உந்தன் பெலத்திலே தேவா எழுந்தருளும் உயர் பெலத்தினால் எம்மை நிரப்பிடும் – 2 1. சர்வத்தையும் கீழ்ப்படுத்தும் வல்லமை இன்னும் அளிக்க வல்ல நாயகனே சகலமும் செய்தோராய் தைரியமாய் நின்றிட சத்துவம் தாரும் ஐயனே -2 2. மரித்தோரை எழுப்பிடும் மா வல்லமை எங்கள் மத்தியில் நீர் விளங்க செய்வீர் சோரும் மண் சரீரம் உள்ளம் உயிர்த்திட தாரும் நின் அபிஷேகமே – 2 3. மாராவின் நீர் இனிக்க செய்த நீர் சுவை மாற்றினீரே கானாவின் நீர் பாழும் என் குணமும் ஆக்கிட திவ்யமாய் ஆட்கொள்ளும் சக்தியுடனே – 2 4. மெல்கிசேதக் முறைமையிலே வந்த நீர் நித்திய ஆசாரியராய் விளங்குகிறீர் காலை பனி சமம் உம் யௌவன ஜனம் பாரில் நீர் பிறக்க செய்வீர் – 2 5. சாலேமில் ராஜரீகம் செய்குவீர் நீதி ஓங்கிட உம் ராஜ்யமெங்கும் ராஜாக்கள் பிரமிக்க ஜாதிகள் நடுங்க சீயோனை சிறக்கச் செய்வீர் – 2