பாடல் #10895
தாய்க்கு அன்பு வற்றிப்போகுமோ
🔤 Thaaykku Anpu Varrippokumo
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாய்க்கு அன்பு வற்றிப்போகுமோ தனது பிள்ளை அவள் மறப்பாளோ தாய்மறந்தாலும் நான் மறவேனே தயவுள்ள இறைவன்தான் உரைத்தாரே குன்று கூட அசைந்து போகலாம் குகைகள் கூட பெயர்ந்து போகலாம் அன்பு கொண்ட எந்தன் நெஞ்சமே அசைவதில்லை பெயர்வதில்லையே தீ நடுவே நீநடந்தாலும் ஆழ்கடலைத் தான் கடந்தாலும் தீமை ஏதும் நிகழ்வதில்லையே தீதின்றியே காத்திடுவேன் நான் கழுகு சிறகில் குஞ்சை அமர்த்தியே கனிந்த அன்பில் சுமந்து செல்லுமே கழுகைப் போல் நான் உனைத்தானே காலமெல்லாம் சுமந்து செல்வேனே உன்னை அன்று மீட்டதும் நானே உரிய பெயரில் அழைத்ததும் நானே என்னைக் கண்டு வந்ததனாலே என்றும் நீயே எனக்குச் சொந்தமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaaykku Anpu Varrippokumo Thanathu Pillai Aval Marappaalo Thaaymaranthaalum Naan Maravaenae Thayavulla Iraivanthaan Uraitthaarae Kunru Kooda Asainthu Pogalaam Kukaigal Kooda Peyarnthu Pogalaam Anpu Konda Endhan Nenjjamae Asaivathillai Peyarvathillaiyae Thee Natuvae Neenatanthaalum Aazhkatalaith Thaan Katanthaalum Theemai Aethum Nigazhvathillaiyae Theethinriyae Kaatthituvaen Naan Kazhuku Sirakil Kunjsai Amartthiyae Kanindha Anpil Sumanthu Sellumae Kazhukaip Pol Naan Unaitthaanae Kaalamellaam Sumanthu Selvaenae Unnai Anru Meettathum Naanae Uriya Peyaril Azhaitthathum Naanae Ennaik Kantu Vandhathanaalae Enrum Neeyae Enakkuch Sondhamae