பாடல் #10879
ஜீவிக்கிற தேவனே ஜீவனின்
🎙 கிறிஸ்தவ பாடல்
ஜீவிக்கிற தேவனே ஜீவனின் அதிபதியே - 2 ஜீவனுள்ளோனாய் என்னையும் காண ஜீவனைஈந்தீரய்யா - 2 வல்லமையான வாக்குத்தத்தம் வல்லவர் இயேசு எனக்களித்ததால் வல்லமையாய் நான் பிரகாசிக்க வல்லபரன் என் துணையிருப்பார் மகிமையின் தேவன் நீர்வாசஞ்செய்ய மண்ணான என்னையும் நேசித்தீரே பரம கானான் என் வாஞ்சையே பரமசீயோன் என் வாசமே சீக்கிரம் வருவேன் என்றவரே சீக்கிரமாய் நீர் வாருமையா மணவாட்டியாய் நான் மாறிடும் மணநாள் என்று வந்திடுமே