பாடல் #10835
தேவ ஜனமே பாவத்தில்
🔤 Thaeva Janamae Paavatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ ஜனமே பாவத்தில் விழுந்தே தேவ கிருபை பெலன் இழந்ததே தேடி மீட்டிடுமே என் இயேசுவே ஆதி அன்பெல்லாம் வாழ்வில் குறைந்தே ஆடம்பரம் நிறைந்தே - பின் மாறினார் மங்கும் திரிகளெல்லாம் அணையுதே மனதுருகிடுமே தியாகம் எளிமை , தாழ்மை மறந்தே சிநேகம் உலகினிலே செலுத்தினார் ஆதி பிரதிஷ்டைகளும் உடைந்ததே ஜோதி மங்கிடுதே கள்ளங்கபட வேலையாட்கள் கால்கள் அலைந்திடுதே கெடுத்திட நித்ய சுவிசேஷ நன்மைக்குத்தான் நிதமும் தூஷணமே அந்திகிறிஸ்து அற்புதங்களால் மந்தையைக் கலக்கி வஞ்சிக்கவே தேவன் தெரிந்தெடுத்த பேதைகளும் தவறி செல்கின்றனர் வல்லமை மிகும் இயேசு நாமம் கொல்லும் சாத்தானையும் பெலமுடன் கர்த்தர் கடிந்து கொள்வீர் பிசாசை காலின் கீழ் மிதிப்பீர் நல்விசுவாசம் காணப்படுமோ நேசர் வருகையிலே எப்படியும் உந்தன் மணவாட்டி சபைதனை உயிர்ப்பித்தே அழைப்பீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Janamae Paavatthil Vizhunthae Thaeva Kirupai Pelan Izhandhathae Thaeti Meettitumae En Yesuvae Aathi Anpellaam Vaazhvil Kurainthae Aadambaram Nirainthae - Pin Maarinaar Mangkum Thirigalellaam Anaiyuthae Manathurukitumae Thiyaagam Elimai , Thaazhmai Maranthae Sinaegam Ulakinilae Selutthinaar Aathi Pirathishtaigalum Utaindhathae Jothi Mangkituthae Kallanggapata Vaelaiyaatkal Kaalkal Alainthituthae Ketutthida Nithya Suvisaesha Nanmaikkutthaan Nidhamum Thooshanamae Anthikiristhu Arpudhanggalaal Manthaiyaik Kalakki Vanjsikkavae Devan Therinthetuttha Paethaigalum Thavari Selkindranar Vallamai Mikum Yesu Naamam Kollum Saatthaanaiyum Pelamudan Kartthar Katinthu Kolveer Pisaasai Kaalin Keezh Mithippeer Nalvisuvaasam Kaanappatumo Naesar Varukaiyilae Eppatiyum Undhan Manavaatti Sapaidhanai Uyirppitthae Azhaippeer