பாடல் #1069
உந்தன் ஆவியே
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
உந்தன் ஆவியே, சுவாமி, என்றன் மீதினில் வந்து சேரவே, அருள் தந்து காவுமே. 1.இந்தமானிடர் வினை தந்த சாபமும் நிந்தை யாவுமே பட வந்த ஏசுவே. - உந்தன் 2.சத்ய ஆவியைச் சீடர்க் கித்தரை விட, சித்தமாய் உரை புரி நித்ய தேவனே, - உந்தன் 3.பெந்தே கோஸ் தெனும் மாசிறந்த நாளிலே விந்தை ஆவியின் அருள் தந்த நேர்மையே, - உந்தன் 4.மதி மயக்குதே; பேயும் மன தியக்குதே, அதிகமாய்க் கடல் அலை அறைந்து பாயுதே; - உந்தன் 5.தாசன் யானுமே புகழ் வீசும் வாய்மையே வாச மாகவே அருள், நேச தேவனே. - உந்தன்