பாடல் #1053
உங்கள் கண்ணீரையும் காண்பவர் இயேசு
🔤 Unggal Kanneeraiyum Kaanpavar Yesu
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்கள் கண்ணீரையும் காண்பவர் இயேசு சிந்தும் கண்ணீரையும் துடைப்பவர் இயேசு கலங்கிடத் தேவை இல்லையே உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் என்றார் இயேசு உள்ளங்கையில் உன்னை வைத்து காப்பேன் என்றார் இயேசு ஆகாரின் கண்ணீரை துடைத்தவர் அவர்தானே ஆன்னாளின் கண்ணீரைக் கண்டதும் அவர்தானே ஆகாரின் அன்பு மகன் தாகம் தீர்த்தாரே ஆன்னாளின் கர்ப்பத்தை தேவன் திறந்தாரே உன் மனதின் பாரங்களை இயேசு அறிவாரே உனக்குதவி செய்திடவே உன் இயேசு வருவாரே உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் மார்த்தாளின் கண்ணீரை தேவன் கண்டாரே மரியாளின் கண்ணீரில் மனம் உருகி நன்றாரே லாசருவே வா வெளியே என்றே சொன்னாரே மரித்தவனை உயிரோட எழும்பச் செய்தாரே நீ வணங்கும் தேவனவர் சர்வ வல்லவரே நீ அழுதால் மனதுருகும் உன் இயேசு நல்லவரே உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் தேற்றிடுவர் இல்லையென்று ஏக்கம் கொள்ளாதே தினந் தோறும் நீ அழுது சோர்ந்து போகாதே ஆதரவு இல்லையென அச்சம் கொள்ளாதே ஆதிசயங்கள் செய்பவரை துச்சமாய் எண்ணாதே காண்பவரும் காப்பவரும் மீட்பரும் அவர்தானே கண்ணீரை களிப்பாக்கும் தெய்வமும் அவர்தானே உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unggal Kanneeraiyum Kaanpavar Yesu Sinthum Kanneeraiyum Thutaippavar Yesu Kalangkidath Thaevai Illaiyae Unggal Thukkam Santhoshamaay Maarum Enraar Yesu Ullangkaiyil Unnai Vaitthu Kaappaen Enraar Yesu Aakaarin Kanneerai Thutaitthavar Avarthaanae Aannaalin Kanneeraik Kandathum Avarthaanae Aakaarin Anpu Makan Thaagam Theertthaarae Aannaalin Karppatthai Devan Thiranthaarae Un Manathin Paaranggalai Yesu Arivaarae Unakkudhavi Seythidavae Un Yesu Varuvaarae Unggal Thukkam Santhoshamaay Maarum Maartthaalin Kanneerai Devan Kantaarae Mariyaalin Kanneeril Manam Uruki Nanraarae Laasaruvae Vaa Veliyae Enrae Sonnaarae Maritthavanai Uyiroda Ezhumbach Seythaarae Nee Vanangkum Devanavar Sarva Vallavarae Nee Azhuthaal Manathurukum Un Yesu Nallavarae Unggal Thukkam Santhoshamaay Maarum Thaerrituvar Illaiyenru Aekkam Kollaathae Thinan Thorum Nee Azhuthu Sornthu Pokaathae Aadharavu Illaiyena Accham Kollaathae Aathisayanggal Seypavarai Thucchamaay Ennaathae Kaanpavarum Kaappavarum Meetparum Avarthaanae Kanneerai Kalippaakkum Theyvamum Avarthaanae Unggal Thukkam Santhoshamaay Maarum