பாடல் #1039
ஈசனே கிறிஸ்தேசு
🔤 Eesanae Kiristhaesu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஈசனே! கிறிஸ்தேசு நாயகனே! உன்றன் இராஜ்யம் வருவதாக! ஈசனே! கிறிஸ்தேசு நாயகனே! 1.பாசமுறும் எழில் பரலோக ராஜியம் வருக! பாரில் நரர் உயர்தர வாழ்வு பெறுக! நேச அன்பின் அருட்பிரகாச நெறிநேர் பெருக! நீச அநியாய இருள் தேசத்தில் நில்லாதொழிக! - ஈச 2.நல்லறிவு என்னும் கலம் நாடும் சமத்துவ பலம், வல்லமைக்குன்றாய்த் திகழும் வாய்மையாம் நலம், எல்லாருமே யாம் ஓர்குலம் ஏகதாயின் சேயர் எனும் பல்லவியைப் பாடும் உளம் கொள்ளுவதாக இந்நிலம். - ஈச 3.அஞ்ஞானம் வேரோடழிய, அலகையின் பேரொழிய, அத்தன் உனைப் பார் அறிய, ஆவிக்குரிய மெய்ஞ்ஞான அனலெரிய, விண்ணவா! நீயே பெரிய வேந்தனாய் ஆட்சி புரியவேண்டும் அருள்தா, நிறைய. - ஈச
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eesanae! Kiristhaesu Naayakanae! Undran Iraajyam Varuvathaaga! Eesanae! Kiristhaesu Naayakanae! 1.paasamurum Ezhil Paraloga Raajiyam Varuga! Paaril Narar Uyarthara Vaazhvu Peruga! Naesa Anpin Arutpirakaasa Nerinaer Peruga! Neesa Aniyaaya Irul Thaesatthil Nillaathozhiga! - Eesa 2.nallarivu Ennum Kalam Naatum Samatthuva Palam, Vallamaikkunraayth Thigazhum Vaaymaiyaam Nalam, Ellaarumae Yaam Orkulam Aegathaayin Saeyar Enum Pallaviyaip Paatum Ulam Kolluvathaaga Innilam. - Eesa 3.anjnjaanam Vaerodazhiya, Alakaiyin Paerozhiya, Atthan Unaip Paar Ariya, Aavikkuriya Meynjnjaana Analeriya, Vinnavaa! Neeyae Periya Vaendhanaay Aatsi Puriyavaentum Arulthaa, Niraiya. - Eesa