பாடல் #1033
நம்பியே வா நடத்துவார் நாதன்
🎙 கிறிஸ்தவ பாடல்
நம்பியே வா நடத்துவார் நாதன் அழைப்பு பெரியது வழி விலகாதே பாதை தவறாதே வழி என்றும் காட்டிடுவார் போற்றுவேன் துதிப்பேன் புகழ்ந்து பாடிடுவேன் பாரில் இயேசென்னை நேசிப்பதால் அவரை போற்றிடுவேன் கர்த்தர் பாதை இருளல்ல அவர் வசனம் வெளிச்சமே அவர் கிருபை என்றும் புதிது ஆறுதல் தந்திடுமே தேனினும் இனிய வேதமே தேடுவோர் உள்ளம் மகிழுமே விலைமதியா முத்துக்களாய் விசுவாசம் நல்கிடுமே ஆத்துமாவே கலங்காதே ஆண்டவரை நீ துதித்திடுவாய் காலைத் தீமைக்கு விலக்கியே காத்துன்னை இரட்சிப்பதால்