பாடல் #1022
இவரே பெருமான்
🔤 Ivarae Perumaan
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இவரே பெருமான் , மற்றப் பேர் அலவே பூமான் - இவரே பெருமான் 1. கவலைக் கிடங்கொடுத் தறியார் - வேறு பவவினை யாதுமே தெரியார் - இப் புவனமீது நமக்குரியார் --- இவரே 2. குருடர்களுக் குதவும் விழியாம் - பவக் கரும இருளை நீக்கும் ஒளியாம் - தெய்வம் இருக்குந் தலஞ்சல் வாசல் வழியாம் - 3. பலபிணி தீர்க்கும் பரிகாரி - சொல்லும் வலமையில் மிக்க விபகாரி - எக் குலத்துக்கும் நல்ல உபகாரி - 4. அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் - கொடு மறம்விடு பவர்க்கருள் முத்தன் - இங்கே இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன் - 5. அலகை தனை ஜெயித்த வீரன் - பவ உலகை ரட்சித்த எழிற்பேரன் - விண் ணுலகு வாழ் தேவ குமாரன் --- இவரே 6. பொன்னுலகத் தனில்வாழ் யோகன் - அருள் துன்ன உலகில் நன்மைத் தேகன் - நம்பால் தன்னை யளித்த ஓர் தியாகன் -
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ivarae Perumaan , Martrap Paer Alavae Poomaan - Ivarae Perumaan 1. Kavalaik Kidangkotuth Thariyaar - Vaeru Pavavinai Yaathumae Theriyaar - Ip Puvanameethu Namakkuriyaar --- Ivarae 2. Kurudarkaluk Kudhavum Vizhiyaam - Pavak Karuma Irulai Neekkum Oliyaam - Theyvam Irukkun Thalanjjal Vaasal Vazhiyaam - 3. Palapini Theerkkum Parikaari - Sollum Valamaiyil Mikka Vibakaari - Ek Kulatthukkum Nalla Ubakaari - 4. Aranj Seyvathinil Oru Sitthan - Kotu Maramvitu Pavarkkarul Mutthan - Ingkae Iranthork Kuyireeyum Kartthan - 5. Alakai Thanai Jeyittha Veeran - Pava Ulakai Ratsittha Ezhirpaeran - Vin Nulaku Vaazh Thaeva Kumaaran --- Ivarae 6. Ponnulakath Thanilvaazh Yogan - Arul Thunna Ulakil Nanmaith Thaegan - Nampaal Thannai Yalittha Or Thiyaagan -