பாடல் #102
அன்பரின் நேசமே என் இன்பமே உமக்கு நான்
🔤 Anbarin Naesamae En Inbamae Umakku Naan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பரின் நேசமே என் இன்பமே உமக்கு நான் என்றென்றுமாய் புகழ் கொண்டாடுவேன் 1. பாவம் போக்கினீர் சாபம் நீக்கினீர் வரம் ஈந்திட்டீர் பரமுமேகினீர் நீரே என் வாஞ்சை உள்ளத்தின் இன்பம் கண்டு களிக்க என்று வருவீர் ஆனந்தமாய் ஆசை பொங்கிடுதே 2. பாவ ஆசையால் படுமோசத்தால் கொடும் வாதையால் மரணபயத்தால் தாவியே வந்து பாவியின் பாரம் யாவையும் நீக்கி ஜீவனீந்தே மேவியே உம் பாதம் போற்றி நிற்பேன் 3. அன்பினாலதோ என்னை மீட்கவோ நிந்தையான ஓர் மரணமானீரோ பார சிலுவை பாவி எனக்காய் பதிந்த தோளில் சுமந்தீரோ நீர் பார்த்திபனே பதில் என் செய்வேனோ 4. ஒரே யாகத்தால் ஒரே ஆவியால் பரிசுத்தமாம் மணவாட்டியாக பூரணராய் நிற்க புண்ணியம செய்த அண்ணலின் அன்பை வர்ணிக்கலாமோ எண்ணியே என் மனம் பொங்கிடுதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anbarin Naesamae En Inbamae Umakku Naan Enrenrumaay Pugazh Kontaatuvaen 1. Paavam Pokkineer Saabam Neekkineer Varam Eenthitteer Paramumaekineer Neerae En Vaanjsai Ullatthin Inbam Kantu Kalikka Enru Varuveer Aanandhamaay Aasai Pongkituthae 2. Paava Aasaiyaal Patumosatthaal Kotum Vaathaiyaal Maranapayatthaal Thaaviyae Vanthu Paaviyin Paaram Yaavaiyum Neekki Jeevaneenthae Maeviyae Um Paadham Porri Nirpaen 3. Anpinaalatho Ennai Meetkavo Ninthaiyaana Or Maranamaaneero Paara Siluvai Paavi Enakkaay Pathindha Tholil Sumantheero Neer Paartthibanae Pathil En Seyvaeno 4. Orae Yaagatthaal Orae Aaviyaal Parisutthamaam Manavaattiyaaga Pooranaraay Nirka Punniyama Seytha Annalin Anpai Varnikkalaamo Enniyae En Manam Pongkituthae