பாடல் #1012
இயேசு என்ற நாமத்திற்கு
🔤 Yesu Endra Naamatthirku
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு என்ற நாமத்திற்கு எத்தனை மகிமை தேவன் சொன்ன வார்த்தையிலே எவ்வளவு கிருபை இயேசு என்ற நாமத்திற்கு எத்தனை மகிமை, என் தேவன் சொன்ன வார்த்தையிலே எவ்வளவு கிருபை... - 2 வானத்திலும் பூமியிலும் விளங்கிடும் நாமம் வான சேனை தூதர்களும் வணங்கிடும் நாமம்... - 2 வானுலத்தோர் பூதலத்தோர் பூமியின் கீழோர் யாவருடைய முழங்கால்களும் முடங்கிடும் நாமம்...-2 சிலுவையிலே தொங்கும்போதும் மன்னிப்புத்தந்தார், தன்னிடத்தில் வந்தவரே புறம்பே தள்ளார்... - 2 தாழ்மையுள்ள மனிதருக்கு கிருபை அளிப்பார், தாயைப்போல அன்பாய் நம்மை அனைத்துக்கொள்வார்...-2 இயேசு வந்த உள்ளங்களில் என்றும் சந்தோஷம், நேசர் தங்கும் இல்லங்களில் என்றும் சமாதானம்... - 2 அவரை ஏற்றுக்கொண்டவர்கள் இரட்சிப்புப் பெறுவார் மீட்புக்கென்று ஆவியிலே முத்திரை பெறுவார்... -2 இயேசு சொன்ன வார்த்தைகள் எல்லாம் நிறைவேறுது பின்மாரி மழையும் இன்று ஊற்றப்படுகுது... - 2 வருவேன் நான் என்று சொன்னவர், மீண்டும் வருவார், அவருடனே செல்ல நாமும் ஆயத்தப்படுவோம்... -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Endra Naamatthirku Etthanai Makimai Devan Sonna Vaartthaiyilae Evvalavu Kirupai Yesu Endra Naamatthirku Etthanai Makimai, En Devan Sonna Vaartthaiyilae Evvalavu Kirupai... - 2 Vaanatthilum Poomiyilum Vilangkitum Naamam Vaana Saenai Thoodharkalum Vanangkitum Naamam... - 2 Vaanulatthor Poodhalatthor Poomiyin Keezhor Yaavarutaiya Muzhangkaalkalum Mudangkitum Naamam...-2 Siluvaiyilae Thongkumpothum Mannipputthanthaar, Thannidatthil Vandhavarae Purampae Thallaar... - 2 Thaazhmaiyulla Manidharukku Kirupai Alippaar, Thaayaippola Anpaay Nammai Anaitthukkolvaar...-2 Yesu Vandha Ullanggalil Enrum Santhosham, Naesar Thangkum Illanggalil Enrum Samaathaanam... - 2 Avarai Aerrukkondavarkal Iratsippup Peruvaar Meetpukkenru Aaviyilae Mutthirai Peruvaar... -2 Yesu Sonna Vaartthaigal Ellaam Niraivaeruthu Pinmaari Mazhaiyum Inru Oortrappatukuthu... - 2 Varuvaen Naan Enru Sonnavar, Meentum Varuvaar, Avarudanae Sella Naamum Aayatthappatuvom... -2