பாடல் #1011
இறைவன் நீயே
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
இறைவன் நீயே - எளியனுக் கிரங்குவாயே. மறை விளக்கி இந்நரரை மீட்க, - இம் மானுவேல் எனும் நாமம் மேவியே, தரையில் வந்தவ தரித்த ஏழைகள் தாதா, ஏசுநாதா, என். - இறை 1.அண்டர்கள் போற்றும் விண்ணோனே, - எங்கள் ஆதரவாய் உற்ற கோனே, - நல்ல தொண்டர்களுக் கருள் புரியும் நன் மனத் தூயா, அன்பர் நேயா, என் - இறை 2.நன்று திகழ் பெரியோனே, - திவ்ய ஞானம் எனும் பெயரோனே, - இயல் அன்றும் இன்றும் என்றும் ஒன்றுபோல உறும் ஐயா, ஒளிர் மெய்யா, என். - இறை 3.எங்கும் நிறைந்த வல்லோனே, அன்பர்க் கின்பு செய்கின்ற நல்லோனே, - மிக இங்கிதமாய் உனை ஏத்தித் தொழ அருள் ஈவாய்; க்ருபை ஆவாய்; என். - இறை