பாடல் #1007
இறுதி இராப்போஜன விருந்ததிலே
🎙 Sis. சாராள் நவரோஜி
இறுதி இராப்போஜன விருந்ததிலே இரட்சகர் வீற்றிருந்தார் இயேசு பன்னிரு சீஷருடனே 1. அப்பமதை எடுத்தவர் ஆசீர்வதித்ததை பிட்டுத் தந்தார் எந்தன் சரீரம் இதுவே என்றே பரிமாறினார் – இறுதி 2. பாத்திரத்தில் நவரசம் பாவத்தைக் கழுவின தூய இரத்தம் இரட்சண்ய புது உடன்படிக்கையே இதைப் பானம் பண்ணினார் – இறுதி 3. அன்பின் சீஷன் ஆறதலாய் அண்ணலின் மார்பினில் சாய்ந்திருந்தான் துரோகியாம் யூதாஸ் துணிக்கையும் வாங்கி தீவிரம் போய் மறைந்தான் – இறுதி 4. சரீரமாம் சபையிலே சத்திய ஆவியால் இணைத்தாரே நன்றியும் பொங்க நிலைத்து நின்றாலே நற்கருணை ஈகுவார் – இறுதி 5. கபடற்ற மனதுடன் கிறிஸ்துவின் மன்னிக்கும் சிந்தையுடன் சந்தோஷமாக சமாதானமாக பந்தியில் பங்கடைவோம் – இறுதி 6. பக்தரோடே சீயோனிலும் பிதாவின் இராஜ்ஜிய பந்தியிலும் வாஞ்சையாய் நாமும் வருகையில் சென்று விரைந்து சேர்ந்து கொள்ளுவோம் – இறுதி